ஆர்எஸ்எஸ்-ன் பிரார்த்தனை என்பது தாய்நாட்டின் மீதான பக்தியின் வெளிப்பாடால் தோன்றிய கூட்டு உறுதிமொழி என மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
ஆர்எஸ்எஸ்-ன் நூற்றாண்டு விழாவையொட்டி, மஹாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் அந்த அமைப்புக்காக இயற்றப்பட்ட பாடல் தொகுப்பை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பிரபல பாடகர் சங்கர் மகாதேவனால் இயற்றப்பட்ட சில பாடல்களை வெளியிட்டார். பின்னர் பேசிய மோகன் பாகவத், இது பாரத மாதா மீதான பக்தி , அன்பு மற்றும் அர்ப்பணிப்பின் வெளிப்பாடு என கூறினார். ஆடியோ வெளியீட்டால் நாட்டுக்கான பிரார்த்தனை அதிகமக்களை சென்றடையும் எனவும் தெரிவித்தார்.
















