கரூர் பெருந்துயர சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதி மூலமாகவோ, CBI மூலமாகவோ நேர்மையான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என பாஜக எம்.பி அனுராக் சிங் தாகூர் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கரூரில் நடந்த துயர சம்பவத்தில் குழந்தைகள், பெண்கள் என பலர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார்.
இறந்தவர்கள் குடும்பத்தாருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க அரசு வழிவகை செய்ய வேண்டும் என்றும், “இந்த விவகாரத்தில் நியாயமான முறையில் விசாரணை நடைபெற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
உச்சநீதிமன்ற நீதிபதி, CBI மூலமாக நேர்மையாக விசாரணை நடத்த வேண்டும் என அவர் கூறினார்.