கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் வரதட்சணை கேட்டுக் கணவர் வீட்டார், பெண்ணை கொடூரமாகத் தாக்கிய காட்சி வெளியாகி உள்ளது.
ஓசூரை அடுத்த உரிகம் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீலஜா என்பவருக்கும், கர்நாடக மாநிலம் நாராயணபுரம் கிராமத்தை சேர்ந்த அருண்குமாருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.
ஸ்ரீலஜாவை கணவர் வீட்டார் வரதட்சணை கேட்டு அடிக்கடி துன்புறத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஸ்ரீலஜாவை கணவர் அருண்குமார், அவரது தந்தை செளடப்பா உள்ளிட்டோர் வரதட்சணை கேட்டுக் கொடூரமாகத் தாக்கிய காட்சி வெளியாகி உள்ளது.
இந்தக் காட்சியை ஸ்ரீலஜாவின் தங்கை வீடியோ எடுத்துக் கர்நாடக எல்லையில் உள்ள ஆனெக்கல் காவல் நிலையத்தில் ஆதாரத்துடன் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.