புதுக்கோட்டை : சமாதி இடத்தை வீட்டுமனை பட்டாவாக வழங்கிய வருவாய்த்துறை அதிகாரிகள்!
Oct 9, 2025, 09:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதுக்கோட்டை : சமாதி இடத்தை வீட்டுமனை பட்டாவாக வழங்கிய வருவாய்த்துறை அதிகாரிகள்!

Web Desk by Web Desk
Oct 4, 2025, 12:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுக்கோட்டை அருகே திமுக முன்னாள் அமைச்சர் ஆலங்குடி சுப்பையாவின் சமாதி உள்ள இடத்தை, வீட்டுமனை பட்டாவாக வருவாய்த்துறை அதிகாரிகள் வழங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கரும்பிரான்கோட்டையை சேர்ந்த சுப்பையா என்பவர் 1967 சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் ஆலங்குடியில் வெற்றி பெற்றவர்.

1969ல் கருணாநிதி முதலமைச்சராகப் பொறுப்பேற்றபோது அறநிலையத்துறை, வீட்டுவசதி மற்றும் இடவசதி கட்டுப்பாடு துறைகளுக்குச் சுப்பையா அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

1976ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் சுப்பையா உயிரிழந்த நிலையில் கரும்பிரான்கோட்டையில் சுப்பையாவின் வீட்டின் அருகே உள்ள புறம்போக்கு இடத்தில் உடல் புதைக்கப்பட்டு சமாதி கட்டப்பட்டது.

காலப்போக்கில் இந்தச் சமாதி சிதிலமடைந்ததால் சில தினங்களுக்கு முன்பு சமாதியைச் சீரமைக்க சுப்பையாவின் குடும்பத்தினர் சென்றனர்.

அப்போது அங்கு வந்த ஒருவர், சமாதி உள்ள இடத்தில் அதிகாரிகள் தனக்கு வீட்டுமனை பட்டா வழங்கி இருப்பதாகத் தெரிவித்தார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், புதுக்கோட்டை வட்டாட்சியரிடம் புகார் அளித்த நிலையில் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார். இந்தச் சம்பவம், திமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Pudukkottai: Revenue officials have granted the land where the former DMK minister's samadhi is located as a housing pattaவருவாய்த்துறை அதிகாரிகள்
ShareTweetSendShare
Previous Post

மகாராஷ்டிரா : ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியிடம் செயின் பறிப்பு – கொள்ளையனை துரிதமாக பிடித்த ராணுவ வீரர், ரயில்வே போலீசார்!

Next Post

விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா நிச்சயதார்த்தம்?

Related News

மும்பையில் நடிகை ராணி முகர்ஜியின் யாஷ் ராஜ் பிலிம்ஸ் ஸ்டூடியோவை பார்வையிட்ட பிரிட்டன் பிரதமர்!

கும்பகோணம் அருகே மழை நீர் வடியாமல் 300 ஏக்கர் நெல் பயிர்கள் சேதம் – விவசாயிகள் வேதனை!

ஊதிய உயர்வு, தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தல் – தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

தரம் உயர்த்தி கட்டப்பட்ட ஆம்பூர் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை – நோயாளிகள் குற்றச்சாட்டு!

ஆடுதுறை அருக அரசு பள்ளியில் தடுப்புகள் இன்றி கட்டப்பட்ட கழிவறை!

கொடைக்கானல் மலைப்பகுதியில் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை!

Load More

அண்மைச் செய்திகள்

வேலூர் அருகே காட்டாற்று வெள்ளம் – பள்ளிக்கு செல்ல முடியாத மாணவர்கள்!

கரூர் செல்வது தொடர்பாக மாவட்ட எஸ்பியை அணுகலாம் – விஜய்க்கு டிஜிபி அலுவலகம் பதில்!

தமிழகத்தை ஊழல் படுகுழியில் தள்ளிய திமுக தலைவரின் பெயரை திணிக்க முயற்சி – அண்ணாமலை கண்டனம்!

சென்னையில் ஆட்டோக்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பிரச்சாரம் – நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்தார்!

இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழகம் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

பிரதமர் மோடியுடன் கெய்ர் ஸ்டார்மர் இன்று சந்திப்பு – முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இஸ்ரேல்- பாலஸ்தீன பிரச்னை : தீர்வை முன்வைக்கும் மோடியின் ராஜ தந்திரத்திற்கு பாராட்டு!

பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்யும் அமெரிக்கா : எதனையும் எதிர்கொள்ள தயாராக இந்தியா!

GOOGLE PAY-க்கு போட்டியாக ZOHO PAY : நிதி சேவை துறையில் கால் பதிக்கும் ஸ்ரீதர் வேம்பு!

Cold Start ட்ரோன் பயிற்சி : வான் போருக்கு தயார் – இந்திய ராணுவ தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies