அசாம் மாநிலம், குவாகாத்தியில் நடைபெறும் BWF உலக ஜூனியர் கலப்பு அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் நேபாளத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இரண்டாம் நிலை வீரர்களைக் கொண்ட இந்தியா, நேபாளத்தை 2-0 என்ற கணக்கில் இலகுவாகத் தோற்கடித்தது.இந்த வெற்றிமூலம், இந்தியா தனது குழுவில் வலுவான தொடக்கத்தைப் பதிவு செய்துள்ளது. இந்தியா தனது அடுத்த குழு போட்டிகளில் செவ்வாய்க்கிழமை இலங்கையையும், புதன்கிழமை ஐக்கிய அரபு அமீரகத்தையும் எதிர்கொள்ளவுள்ளது.