தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியை விரும்புவதால், தன்னெழுச்சியாக அதிமுக கூட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மதுரையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
விஜய்க்காக இபிஎஸ் குரல் கொடுத்ததால், அவருக்குத் தவெக தொண்டர்கள் ஆதரவு கொடுக்கிறார்கள் என்றும் தவெக தொண்டர்கள் இபிஎஸ்-ஐ விரும்புவதால், தன்னெழுச்சியாகக் கொடியைக் காட்டுகிறார்கள் என்று குறிப்பிட்டவர், அதிமுக தொண்டர்கள் அடுத்த கட்சி கொடியைத் தூக்கியதாக வரலாறு உள்ளதா? என்று செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பினார்.