தமிழகத்தில் பெண்களை பாதுகாக்க திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின், தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் தொடக்க நிகழ்ச்சியில் பேசிய அவர், கரூர் தவெக கூட்டத்திற்கு 100 காவலர்கள் மட்டுமே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக தெரிவித்தார்.
நகரம் முதல் கிராமம் வரை ஆணவப் படுகொலை அரங்கேறுவதாகவும், பொதுமக்களை பார்த்து கையசைப்பதை மட்டுமே முதலமைச்சர் ஸ்டாலின் வழக்கமாக கொண்டுள்ளதாகவும் அவர் சாடினார்.
கருணாநிதி பெயரில் விழா மற்றும் சிலை வைப்பதையே திமுக அரசு முழு நேர வேலையாக கொண்டுள்ளது என்றும், வம்புச் சண்டை இழுப்பதற்காகவே திமுகவினர் டெல்லிக்கு செல்கின்றனர் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
காஞ்சிபுரம் இருமல் மருந்து விவகாரத்தில் தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அண்ணாமலை சாடினார்.