அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்த காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
Oct 14, 2025, 07:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்த காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!

Web Desk by Web Desk
Oct 14, 2025, 12:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்த காசா அமைதி ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்தானது.

இஸ்ரேல்-காசா இடையேயான போர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்மொழிந்த 20 அம்சங்கள் கொண்ட ஒப்பந்தத்தால் முடிவுக்கு வந்துள்ளது. ட்ரம்ப் அறிவித்த காசா அமைதி ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக எகிப்தில் கையெழுத்தானது.

எகிப்தின் ஷர்ம் எல் ஷேக் நகரில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் எகிப்து அதிபர் அப்தெல் ஃபட்டா எல் சிசி தலைமையில் காசா அமைதி மாநாடு நடைபெற்றது.

இதில், ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் மற்றும் 20க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவர்கள், அவர்கள் சார்பில் அனுப்பப்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இந்தியாவின் சார்பில் வெளியுறவுத்துறை இணையமைச்சர் கிர்த்தி வர்தன் சிங் கலந்து கொண்டார்.

மாநாட்டில், காசா அமைதி ஒப்பந்தத்தில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டார். அதைத் தொடர்ந்து, ட்ரம்ப் தலைமையில், உலகத் தலைவர்கள் ஆதரவுடன் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

காசா அமைதி மாநாட்டில் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இது மத்திய கிழக்கைத் தாண்டி உலக வரலாற்றில் ஒரு முக்கியமான தருணம் என்று கூறினார்.

காசாவுக்கு ஆதரவு வழங்கி மக்களை உயர்த்த அனைவரும் ஒப்புக்கொண்டதாகக் கூறிய அவர், காசா மறுசீரமைக்கப்பட வேண்டியதையும் சுட்டிக் காட்டினார்.

மக்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்க அனைவரும் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

காசாவில் நடந்த போர், பல வருட துன்பங்களுக்குப் பிறகு தற்போது முடிந்துள்ளதாகக் கூறிய அவர், மனிதாபிமான உதவிகள் பெருமளவில் வந்து கொண்டிருப்பதாகவும், அதற்காக அமைதி மாநாட்டில் பங்கேற்ற பல நாடுகள் நிதி வழங்கியுள்ளதாகவும் கூறினார்.

காசாவில் மறுசீரமைப்பு தொடங்குவதாகக் கூறிய ட்ரம்ப், ஒரு புதிய நாள் உதயமாகும் காட்சி அழகாக உள்ளதாகக் குறிப்பிட்டார்.

தான் ஒரு சிறந்த எதிர்காலத்தை உறுதிசெய்வதில் பங்குதாரராக இருக்க விரும்புவதாகக் கூறிய அவர், 3ஆம் உலகப் போர் நடைபெறாது என நம்புவதாகவும் தெரிவித்தார்.

இந்தியா ஒரு சிறந்த நாடு என்றும், பிரதமர் மோடி தனக்கு மிகவும் நெருக்கமான நண்பர் எனவும் கூறிய அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடி அற்புதமான பணியைச் செய்துள்ளதாகவும் பாராட்டினார். பாகிஸ்தானும் இந்தியாவும் இனி நல்லுறவுடன் இருக்கப் போவதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டார்.

Tags: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்காசா அமைதி ஒப்பந்தம்The Gaza peace deal announced by US President Trump has been signed
ShareTweetSendShare
Previous Post

ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை!

Next Post

6-வது நாளாக தொடரும் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம்!

Related News

GOOD NEWS மக்களே : ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் வேலை பறிபோகாதாம் – கூடுதல் பணியாளர்களை நியமிக்க கூகுள் திட்டம்!

ஏஐ மையம் குறித்து பிரதமர் மோடியிடம் விவரித்தார் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை!

ஜெர்மனி : உலகின் முதல் செங்குத்தாக மிதக்கும் சூரிய சக்தி நிலையம்!

மலேசியாவில் 6 ஆயிரம் மாணவர்களுக்கு இன்புளுயன்சா காய்ச்சல் – மூடப்பட்ட பள்ளிகள்!

நார்வேயில் உள்ள தூதரகத்தை மூடியது வெனிசுலா அரசு!

1638 கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி கின்னஸ் சாதனை படைத்த இந்தியர்!

Load More

அண்மைச் செய்திகள்

ராஜஸ்தானில் பேய்கள் உலா : இரவில் தங்க தடை – அமானுஷ்யம் நிறைந்த திகில் கிராமம்!

திமுக அரசுக்கு எங்கிருந்து வருகிறது அகம்பாவம்? – அண்ணாமலை கேள்வி!

2 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடக்கம்!

மேப்பில்ஸ் செயலியை பயன்படுத்தி அஸ்வினி வைஷ்ணவ்!

கோவை மாமன்ற கூட்டத்தில் அதிமுக – திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதம்!

டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் – 3வது இடத்துக்கு முன்னேறிய இந்தியா!

ரூ.17 கோடி மதிப்புள்ள கைப்பையுடன் விருந்தில் கலந்து கொண்ட நீடா அம்பானி!

சாதிய பெயர்கள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மழுப்பலாக பதிலளித்த திருமாவளவன்!

ரியல் மாட்ரிட் அணியின் முகமாகவே ரொனால்டோ திகழ்கிறார் – எம்பாப்வே

சூர்யகுமார் யாதவ் குடும்பத்துடன் அவ்னீத் கபூர் சாமி தரிசனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies