சீனாவில் ஷியோமி நிறுவனத்தின் மின்சாரக் கார் மற்றொரு கார் மீது மோதிய விபத்தில் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவத்தில் அந்நிறுவனத்தின் பங்குகள் 9 சதவீதம் சரிந்துள்ளன.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள செங்டு நகரில் ஷியோமி நிறுவனத்தின் SU7 மின்சாரக் காரை ஓட்டி சென்ற நபர் எதிர்பாரத விதமாக மற்றொரு கார் மீது மோதியதால் விபத்து ஏற்பட்டது.
இதில் மின்சாரக் கார் திடீரெனத் தீப்பிடித்து எரிந்தது. அப்போது அங்கிருந்தவர்கள் மின்சாரக் காரை திறக்க எவ்வளவு முயன்றும் முடியாததால் அதில் சிக்கி கொண்ட ஓட்டுநர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில் மின்சாரக் காரில் குளறுபடிகள் இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்ததால் ஷியோமி நிறுவனத்தின் பங்குகள் 9 சதவீதம் வரைச் சரிந்துள்ளது.