நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
சென்னையில் முக்கிய பிரமுகர்களின் வீடு மற்றும் அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்ச்சியாக விடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவரிசையில், நீலாங்கரையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நீலாங்கரை போலீசார் வெடிகுண்டு நிபுணர்களோடு விரைந்து சென்று சீமான் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். வெடிகுண்டு எதுவும் சிக்காததால், மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது.