கரூர் துயர வழக்கில், தவெக நிர்வாகிகள் மதியழகன், பவுன்ராஜ் ஆகியோர் இன்று நேரில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
கரூரில் நடைபெற்ற தவெகப் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்தில், கட்சியின் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் பவுன்ராஜ் ஆகியோர் கடந்த 30ஆம் தேதி கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
பின்னர் சிறப்பு புலனாய்வு குழு இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்ட நிலையில், இருவரும் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் காணொலி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டனர்.
இருவரது காவலையும் மேலும் ஒருநாள் நீட்டித்த நீதிமன்றம், இன்று நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்டது. இதுதொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய தவெக வழக்கறிஞர் சீனிவாசன், வழக்கு தொடர்பான அனைத்துக் கோப்புகளையும், சிபிஐ வசம் ஒப்படைக்க, சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததாகக் குறிப்பிட்டார்.
24 மணி நேரம் கடந்தும் சிபிஐ வசம் கோப்புகளை வழங்காதது சட்டவிரோதம் என்றும் அவர் தெரிவித்தார்.