ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஜெய்சால்மாரிலிருந்து ஜோத்பூருக்குப் பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து திடீரெனத் தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து சென்ற தீயணைப்பு துறையினர் பேருந்தில் எரிந்த தீயை அணைத்தனர்.
இருப்பினும் பேருந்து முற்றிலும் எரிந்து சேதமாகியது. இந்தத் தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்ததனர்.
பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர்
குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம ரூபாய் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.