பீகார் சட்டமன்ற தேர்தலில் 30 பேர் அடங்கிய 2 மற்றும் 3-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டமன்றத்திற்கான தேர்தல், நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. மேலும் தேர்தல் முடிவுகள் நவம்பர் 14 அன்று அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த தேர்தலில் பாஜக, முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், சிராக் பஸ்வானின் லோக் ஜன்சக்தி உள்ளிட்ட கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் களம் காண்கின்றன.
பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக மொத்தம் 101 தொகுதிகளில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையொட்டி முதற்கட்டமாக 71 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டிருந்தது. அதைத் தொடர்ந்து 30 பேர் அடங்கிய 2 மற்றும் 3-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி தற்போது வெளியிட்டுள்ளது.
முன்னதாக கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் 57 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.