சட்டப்பேரவையின் 3ம் நாள் கூட்டத்தொடரில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் “கிட்னிகள் ஜாக்கிரதை” என்ற பேட்ஜ் அணிந்து பங்கேற்றனர்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. கூட்டத்தொடரின் 2-வது நாளான நேற்று, கரூர் துயர சம்பவத்தை குறிக்கும் வகையில் கருப்பு பட்டை அணிந்துக்கொண்டு அதிமுக உறுப்பினர்கள் பேரவைக்கு வருகை தந்தனர்.
இதனை அமைச்சர் ரகுபதி கடுமையாக விமர்சனம் செய்தது சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில், 3வது நாளான இன்று, நாமக்கல் கிட்னி திருட்டை குறிக்கும் வகையிலான “கிட்னிகள் ஜாக்கிரதை” என்ற பேட்ஜை அணிந்துகொண்டு அதிமுக உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.