தமிழகத்தில் இந்தியை தடை செய்யும் மசோதாவை தாக்கல் செய்யத் திமுக அரசு திட்டமிட்டுள்ளது வெறும் வதந்தி அல்ல, முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் எனப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்தியை தடை செய்யும் மசோதா குறித்த தகவலை அறிந்து பொள்ளாச்சியில் திமுகவினர் இந்தி எழுத்துக்களை எரித்துக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
திமுக தொண்டர்கள் வழக்கம்போல, இந்தி எழுத்துக்களை எரிப்பதும், கருப்பு மை வைத்து அழிப்பதும் போன்ற வழக்கமான நாடகங்களை தொடங்கி விட்டதாக விமர்சித்துள்ள அவர், இந்தியை தடை செய்யும் மசோதாவை தாக்கல் செய்யத் திமுக அரசு திட்டமிட்டது வெறும் வதந்தி அல்ல, அது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் இயல்பாகவே பிளவுபடுத்தும் இண்டி கூட்டணி, ஊழலில் மட்டும் ஒன்றுபட்டுள்ளதாகவும் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.