பிரம்மோஸ் ஏவுகணையின் எல்லைக்குள் பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலமும் உள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்… உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் தயாரிக்கப்பட்ட முதல் தொகுப்பு பிரம்மோஸ் ஏவுகணையை நாட்டுக்கு அர்ப்பணித்தபோது, பாகிஸ்தானுக்கு மறைமுகமாக எச்சரிக்கையும் விடுத்தார்…
1998ம் ஆண்டு இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்து சூப்பர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்க ஒப்பந்தம் செய்ததன் விளைவாக உதித்ததுதான் பிரம்மோஸ் ஏவுகணை.. இந்தியாவின் பிரம்மபுத்திரா நதி, ரஷ்யாவின் மோஸ்க்வா நதியின் பெயர்களை இணைத்து,, புதிய சூப்பர் சோனிக் ஏவுகணைக்கு பிரம்மோஸ் என்று பெயர்சூட்டப்பட்டது… பிரம்மனின் வலிமைமிக்க அஸ்திரமான பிரம்மாஸ்திரத்தை முன்னிறுத்தியும் இப்பெயர் தேர்வு செய்யப்பட்டது…
நீர், நிலம், வான் பரப்பு என பிரம்மோஸ் ஏவுகணைகளை எங்கிருந்தும் ஏவ முடியும்… 2005-ல் கடற்படையிலும், 2007ம் ஆண்டில் ராணுவத்திலும், 2020-ல் விமானப்படையில் சேர்க்கப்பட்ட பிரம்மோஸ் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பிரம்மாஸ்திரமாக செயல்பட்டு பாகிஸ்தானை அடிபணிய வைத்தது…
முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு வரும் பிரம்மோஸ் ஏவுகணைகள் நம் ராணுவ பலத்தை வலுவூட்டி வருகின்றன.. இந்நிலையில் லக்னோவின் சரோஜினி நகரில் உள்ள BrahMos Aerospace-ல் தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணைகளின் முதல் தொகுப்பை, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெற்றி ஒரு அரிய நிகழ்வு அல்ல என்பதை ஆப்ரேஷன் சிந்தூர் நிரூபித்துள்ளதாகக் கூறினார். இதன் மூலம் இந்திய ராணுவத்தின் வலிமை வெற்றியை பழக்கமாக்கும் நிலையை எட்டியிருப்பதாகவும் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
நமது எதிரிகள் இனி பிரம்மோஸ் ஏவுகணையில் இருந்து தப்பிக்க முடியாது என்று கூறிய அவர், பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலமும் பிரம்மோஸின் எல்லைக்குள் உள்ளதாவும், பாகிஸ்தானுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தார்…. ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை, வெறும் டிரைலர்தான் என்றும் அவர் குறிப்பிட்டார்…
பிரம்மோஸ் ஏவுகணை தயாரிப்பில் உள்ள லக்னோ பிரிவு, உலகம் முழுவதும் இருந்து நிபுணர்களை ஈர்க்கும் என்றும், இது பாதுகாப்பு தொழில்நுட்பத்திற்கான உலகளாவிய மையமாக மாறும் என்றும் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.
அதே நேரத்தில் லக்னோ பிரிவின் வருவாய் அடுத்த நிதியாண்டில் இருந்து மூவாயிரம் கோடியை எட்டும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். பிரம்மோஸ் ஏவுகணைகளின் திறன் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து வருகின்றன..
இதன் வலிமையை புரிந்து கொண்ட இந்தோனேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, எகிப்து, சவுதி அரேபியா, பிரேசில் அர்ஜெண்டினா உள்ளிட்ட 17 நாடுகள் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க விருப்பம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது….. .