திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே காட்டாற்று வெள்ளம் காரணமாக
அமணலிங்கேஸ்வரர் கோயிலை சூழ்ந்தபடி வெள்ள நீர் சென்றது.
திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்க அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, தோணி ஆற்றில் தீடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
இதனால் பஞ்சலிங்க அருவியில் நீர் வரத்து அதிகரித்து அருகில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோயிலை மூழ்கடித்தபடி வெள்ள நீர் சென்றது.
தற்போது வெள்ளம் வடிந்துள்ள நிலையில், பஞ்சலிங்க அருவியில் குளிக்க 2 வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அமணலிங்கேஸ்வரர் கோயிலை தூய்மைபடுத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது.