வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் உண்மையை உணர்ந்து, மறதி நாடகங்களை திமுக தவிர்க்க வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தில் முதலமைச்சரின் இரட்டை நிலைப்பாடு, அவருடைய புரிதல் மேம்படாததை காட்டுவதாக விமர்சித்துள்ளார்.
1952 முதல் 13 முறை வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர், பீஹாரில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் பெயர்கள் நீக்கப்பட்டதாக தேஜஸ்வி யாதவ் கூறியதை முதலமைச்சர் ஸ்டாலின் நம்ப வேண்டாம் என வலியுறுத்தியுள்ளார்.
2016-ல், வாக்காளர் பட்டியலில் 57 லட்சத்து 43 ஆயிரம் போலி வாக்காளர்கள் இருப்பதாக திமுக கூறியதை மேற்கோள்காட்டியுள்ள அவர், அது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத்தாக்கல் செய்ததை மறந்துவிட்டீர்களா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து 2017-ல், தேர்தல் ஆணையரிடம் தமிழகமெங்கும் வாக்காளர் பட்டியலை திருத்த வேண்டும் என திமுக கோரிக்கை வைத்ததை சுட்டிக்காட்டியுள்ள அண்ணாமலை, ண்மையை மீண்டும் உணர்ந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட மறதி நாடகங்களை திமுக தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
















