காங்கிரஸ் கட்சிக்கு வங்கதேச வெறி இருப்பதாக அசாம் மாநில பாஜக விமர்சித்துள்ளது. அசாமின் ஸ்ரீபூமி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சியொன்று நடைபெற்றது.
அதில் கலந்து கொண்ட காங்கிரஸ் நிர்வாகி ஒருவர், அமர் சோனார் பங்களா எனும் வங்கதேசத்தின் தேசிய கீதத்தைப் பாடினார்.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைக் கடுமையாகச் சாடியுள்ள அசாம் பாஜக, சில நாட்களுக்கு முன்பு, வங்கதேசம் முழு வடகிழக்கையும் விழுங்கும் ஒரு வரைபடத்தை வெளியிடத் துணிந்தது எனக் கூறியுள்ளது.
அதற்கு உடந்தையாக இருந்ததை வங்கதேச தேசிய கீதம் பாடி காங்கிரஸ் நிரூபித்துள்ளது எனவும் பாஜக தெரிவித்துள்ளது.
















