தவெக தலைவர் விஜய்யை கூட்டணியில் சேர்ப்பது குறித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுடன் பேசி முடிவெடுக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
தனியார் ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை விரிவுபடுத்த விரும்புவதாக கூறினார். தவெக தலைவர் விஜய்யை கூட்டணியில் சேர்ப்பது உள்ளிட்டவை குறித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுடன் பேசி முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
















