திமுக ஆட்சியில் தமிழகம் ஒவ்வொரு உரிமையையும் இழந்து கொண்டிருப்பதாக பாமக தலைவர் அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பேசிய அவர், உங்கள் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும். திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதே இந்த நடைபயணத்தின் முக்கிய நோக்கம். அதன் அடிப்படையிலேயே இந்த நடைபயணத்தை மேற்கொள்கிறேன். ஊழல் திமுக ஆட்சியை விரட்டி அடியுங்கள். தூக்கி எறியுங்கள் அடுத்தது நமது ஆட்சி உறுதியாக வரும் என்றும் அவர் கூறினார்.
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு விவசாயம் என்றால் என்னவென்று தெரியுமா? என கேள்வி எழுப்பிய அவர், சட்டமன்ற தேர்தலில் ஒரு வன்னியர் கூட திமுகவிற்கு ஓட்டு போடக்கூடாது என்றும் தெரிவித்தார்.
லட்சக்கணக்கான மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் அன்புமணி குறிப்பிட்டார்.
அரியலூர் மாவட்டத்தில் சோழர்கால பாசன திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என நடைப்பயணம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டோம். ஆனால் இந்த அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளும் வறண்டே காணப்படுகிறது.
இந்த பாசன ஏரிகளுக்கு அருகில் சில கிலோமீட்டர் தூரத்தில் செல்லும் கொள்ளிடம் ஆற்றில் இருந்து வீனாக கடலில் கலக்கும் நீரை ஏரியில் நிரப்ப திமுக அரசாங்கள்ம எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
















