கொள்முதலில் தொடரும் குளறுபடி : சாலைகளில் வீணாகும் நெல்மணிகள்!
Nov 3, 2025, 06:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கொள்முதலில் தொடரும் குளறுபடி : சாலைகளில் வீணாகும் நெல்மணிகள்!

Web Desk by Web Desk
Nov 2, 2025, 07:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சியில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் குளறுபடிகளால் டன் கணக்கிலான நெல் மணிகள் சாலையில் கொட்டி வைக்கப்பட்டுள்ளன.

அரும்பாடுபட்டு விளைவித்த நெல்மணிகள் முழுமையாக வீணாகும் முன்பே கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததன் விளைவாக காவிரி டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் உட்பட கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட நெல் மூட்டைகளும் மழையில் நனைந்து வீணாகியுள்ளது.

கொள்முதல் நிலையங்களில் போதிய உட்கட்டமைப்பு வசதியின்மை, உபகரணங்கள் மற்றும் வேலை ஆட்கள் தட்டுப்பாடு போன்ற குளறுபடிகளால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் ஒன்றான திருச்சி மாவட்டத்தில் மட்டும் சுமார் 100-க்கும் அதிகமான அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கி வரும் நிலையில், அங்கு நெல் மணிகளையும் மூட்டைகளையும் பாதுகாப்பாக வைக்க உரிய வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கல்லணை சாலையில் உள்ள பனையபுரம் பகுதியில் அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகள் முழுமையாகவும், முறையாகவும் கொள்முதல் செய்யப்படாத காரணத்தினால் பல டன் நெல் மணிகள் சாலையில் கொட்டி வைக்கப்பட்டுள்ளன

அரும்பாடு விளைவித்த நெல்மணிகளை கொள்முதல் செய்யாததன் விளைவாக விவசாயிகள் அனைவரும் இரவு பகல் பாராமல் சாலையில் கொட்டி வைக்கப்பட்டுள்ள நெல் மணிக்கு காவல் காக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

உரிய நேரத்தில் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

20 முதல் 30 நாட்களாக சாலையில் கொட்டி வைக்கப்பட்டிருக்கும் நெல் மணிகள் ஒருபுறம் மழை மறுபுறம் வெயில் என பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டு வருவதால் விவசாயிகள் மிகுந்த வேதனைக்குள்ளாகியுள்ளனர்.

ஏற்கனவே பல்வேறு இன்னல்களை சந்தித்து விவசாயத்தை தொடர்ந்து வரும் நிலையில், இனியும் காலம் தாழ்த்தாமல் அனைத்து விவசாயிகளின் நெல்மூட்டைகளையும் அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

Tags: paddy procurement centres00 government direct paddy procurement centresKallanai Roadtrichypaddy grainspaddy grains wastepaddy bundles
ShareTweetSendShare
Previous Post

உயிர் பயத்துடன் வாழும் மக்கள் : வாழ தகுதியற்ற குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் – சிறப்பு தொகுப்பு!

Next Post

தனிமனித வளர்ச்சி மூலம் தேசத்தை கட்டமைக்கும் பாதையில் பதஞ்சலி பல்கலைக்கழகம் – குடியரசு தலைவர் பாராட்டு!

Related News

கரூர் நெரிசல் சம்பவம் : 306 பேருக்கு சிபிஐ சம்மன்!

ராகுல்காந்தி உள்ளிட்டோரை விமர்சித்த உ.பி முதல்வர்!

ஆர்ஜேடி அரசு பீகாரை குற்றச்செயல்களின் கூடாரமாக மாற்றியுள்ளது – அமித்ஷா குற்றச்சாட்டு!

சிவகங்கை : பிளக்ஸ் பேனர்கள் வைப்பதில் இரு சமூகத்தினர் இடையே மோதல்!

உலகக் கோப்பையை வென்ற “Women in Blue” : 47 வருட கனவு நிறைவேறியது எப்படி?

தெலங்கானாவில் 20 பேரின் உயிரை பலிவாங்கிய கோர விபத்து!

Load More

அண்மைச் செய்திகள்

ஆந்திரா : கடல் அலையில் சிக்கி பள்ளி மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு!

யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை – சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதி!

வினாடிக்கு 600 கோடி டன் பொருட்களை விழுங்கும் கிரகம்!

இந்தியாவிலிருந்து கோஹினூர் வைரம் கொள்ளை – வீடியோ வைரல்!

புகைக்கு “குட் பை” : மலைக்க வைக்கும் மாலத்தீவுகள்!

புதிய டிஜிட்டல் புரட்சியாக உருவெடுத்து கவனம் ஈர்க்கும் VREELS செயலி!

கர்நாடகா : காங்கிரஸ் – பாஜகவினர் இடையே மோதல்!

இந்திய கம்யூனிஸ்ட் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் அதிருப்தி!

உலகை 150 முறை அழிக்க போதுமான அணுகுண்டுகள் – அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை!

ஸ்ரீகாக்குளம் கோயில் கூட்ட நெரிசல் 9 பேர் பலியான சோகம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies