செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 12 பேரை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கடந்த 31ஆம் தேதி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டதாகவும், இதனை தொடர்ந்து, செங்கோட்டையனின் ஆதரவாளரான முன்னாள் எம்பி சத்யபாமாவை அதிமுகவில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட பொருளாளர் கந்தவேல் முருகன் உள்ளிட்ட 12 பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
















