பீகார் தேர்தல் வெற்றியைப் பொறுத்த கொள்ள முடியாமல் முதலமைச்சர் ஸ்டாலின் வயிற்றெரிச்சலில் பேசி வருவதாகப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
பீகார் தேர்தல் வெற்றியைப் பொறுத்த கொள்ள முடியாத முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வயிற்றெரிச்சல் என்று அண்ணாமலை விமர்சித்தார்.
பீகார் தேர்தல் வெற்றி இந்திய அரசியலில் திருப்புமுனை என்றும் S.I.R- ஆல் அதிகாரப்பூர்வமான வாக்காளர்கள் வாக்களித்து வெற்றி பெற்றோம் என்று அவர் குறிப்பிட்டார்.
பீகாரில் முதலமைச்சர் ஸ்டாலின் பிரசாரம் செய்த தொகுதியில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது என்றும் தவெக தலைவர் விஜய்யின் மனநிலை, பாஜகவை எதிர்பதற்க்கு ஒவ்வொன்றும் செய்கிறார், தேர்தல் ஆணையம் செய்யக் கூடியதை பாஜக உடன் ஒப்பிட்டு எதிற்க்கிறார்கள். எது செய்தாலும் எதிற்க்கிறார், வெறுப்பு அரசியல் செய்து ஓட்டு வாங்கி விடலாம் என விஜய் நினைக்கிறார் என்று குறிப்பிட்டவர் S.I.R- ஐ எதிர்க்கும் விஜய் என்ன தவறு உள்ளது எனச் சொல்லட்டும் வெறும் எதிர்ப்பு மட்டும் தான் விஜய் செய்கிறார் என்று அண்ணாமலை கூறினார்.
ஒற்றுமையாகத் தேர்தலைச் சந்தித்தால் தேர்தலில் வெற்றி பெற்றோம் என்றும் தமிழகத்தில் டாஸ்மாக்கை அகற்றிவிட்டு கள்ளு கடைகளைத் திறப்பதே எங்களின் நிலைப்பாடு என்றும் திமுக நல்ல மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்தார்.
















