தவெக தலைவர் விஜய் வெறுப்பு அரசியலை மட்டுமே பேசுவதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக போராட்டம் அறிவித்த தவெகவுக்கு அவர் கண்டனம் தெரிவித்தார். தேர்தல் ஆணையத்தின் அறிவிப்வை கூட பாஜகவுடன் தொடர்புபடுத்தி விஜய் எதிர்ப்பதாகவும் கூறினார்.
அனைத்தையும் விஜய் எதிர்ப்பாதாகவும், வெறும் எதிர்ப்பு அரசியலை மட்டும் நம்பி மக்கள் வாக்களிப்பதில்லை என்றும் அண்ணாமலை குறிப்பிட்டார்.
இதனை தொடர்ந்து செய்ததால் தான் ராகுல் காந்திக்கு மக்கள் தொடர் தண்டனை வழங்கி வருவதாகவும், ராகுல் தலைமையில் 95 தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எஸ்ஐஆரை எதிர்க்கும் காரணத்தை விஜய் கூற வேண்டும் என்றும் அண்ணாமலை கூறினார்.
















