தமிழகத்தில் நேற்று ஒரு நாள் மட்டும் 4 கொலைகளும், 4 போதைப் பொருள் கடத்தல்களும், 4 பாலியல் குற்றங்களும் 1 கொலை முயற்சியும், காவல்துறை மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிர்ச்சியளிப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், சென்னையில் நீதிமன்ற வளாகத்தில்கொலை முயற்சி நடந்தது, போதையில் இருவர் காவலரையே தாக்கியது ஆகியவை அறிவாலய
ஆட்சியில் தலைநகரிலேயே ஏட்டளவுக்குக்கூட சட்டம் ஒழுங்கு இல்லை என்பதைப் பட்டவர்த்தனமாக்குகிறது என கூறியுள்ளார்.
ஒரு காலத்தில் முதல்வர் ஸ்டாலினால் போலியாக பெருமை பேசப்பட்ட “இரும்புக்கரம்” நான்கரை ஆண்டுகளாக ஒரு போதும் செயல்படாமல் இத்துப்போய் தற்போது ஒட்டுமொத்தமாக துருப்பிடித்துப் போய்விட்டது என்பதற்கு நேற்று ஒரு நாளில் நடந்த குற்றங்களே சாட்சி என்றும் அவர் கூறியுள்ளார்.
துருப்பிடித்த இரும்பைக் காயலான் கடைக்குத் தூக்கிப் போடுவது போல, வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக அரசை மக்களும் கண்காணா தொலைவில் தூக்கி எறியத் தான் போகிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
சட்டம் ஒழுங்கைச் சீர்படுத்தும் தேசிய ஜனநாயகக் கூட்டணியைத் தேர்ந்தெடுத்து, தமிழகத்தைத் தலை நிமிரச் செய்யப் போகிறார்கள் இது உறுதி என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
















