அசத்தும் கைவினை கலைஞர்கள் : கண்களை கவரும் வண்ண விளக்குகள்!
May 6, 2026, 06:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அசத்தும் கைவினை கலைஞர்கள் : கண்களை கவரும் வண்ண விளக்குகள்!

Murugesan M by Murugesan M
Nov 19, 2025, 12:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

​தீபத் திருவிழாவிற்கான விளக்குகள் திண்டுக்கல்லில் அமர்க்களமாகத் தயாராகி வருகின்றன. பாரம்பரிய பெருமையுடன் பலரையும் கவர்ந்த கார்த்திகை தீப விளக்குகள்குறித்து பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்.

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள நொச்சியோடைப்பட்டியில் கைவினை சுடுமண் சிற்ப கலைஞர்கள் கலை கூடம் செயல்பட்டு வருகிறது.

இங்குதான் கார்த்திகை தீப விளக்குகள் தயாரிக்கும் பணி களைகட்டியுள்ளது. விநாயகர் சதுர்த்தியை ஒட்டி விநாயகர் சிலைகள், நவராத்திரியை ஒட்டி கொலு பொம்மைகள், வீட்டு அலங்கார பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான கலைப் பொருள்களை இங்குள்ள கைவினை கலைஞர்கள் தயாரித்து வருகின்றனர்.

அந்த வரிசையில்தான் கார்த்திகை தீப விளக்குகள் தயாரிக்கும் பணி களைகட்டியுள்ளது. சுற்று வட்டார பகுதிகளில் இருந்து களிமண் எடுத்து வரப்பட்டு சுட வைக்கப்பட்டு பின்னர் கைகளால் கார்த்திகை சுட்டி விளக்குகள் தயாராகின்றன.

தேங்காய் விளக்கு, முறம் விளக்கு, மேஜிக் விளக்கு, மாட விளக்கு, ஸ்டார் விளக்கு, அன்ன விளக்கு, குத்து விளக்கு, குபேர விளக்கு, லட்சுமி விளக்கு, ஒரு அடுக்கு முதல் நூறு அடுக்கு எனப் பல்வேறு வகையான விளக்குகளை களிமண்ணால் செய்யும் பணி கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வருகிறது.

இந்த விளக்குகளை சூலையில் சுட வைத்து எடுத்து அதற்கு ஏற்பப் பல்வேறு வண்ணம் தீட்டப்பட்டு, பார்க்கும் போதே கண்களை கவரும் வகையில் தயாராகின்றன. 20-க்கும் மேற்பட்ட கைவினை கலைஞர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

2 ரூபாய் முதல் 400 ரூபாய் வரையிலான விலையில் விளக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. திண்டுக்கல் மாவட்டம் மட்டுமல்லாது திருப்பூர், ஈரோடு, கோவை,சென்னை, திருச்செந்தூர், திருநெல்வேலி என தமிழகம் முழுவதும் விற்பனைக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.

ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய வெளி மாநிலங்களுக்கும் கார்த்திகை தீப விளக்குகள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. பல்வேறு வண்ணங்களில் தயாராகும் கார்த்திகை தீப விளக்குகள் பல மாநிலத்தவர்களையும் கவர்ந்திழுப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

Tags: திண்டுக்கல்Amazing Craftsmen: Eye-catching Colored Lightsவண்ண விளக்குகள்​தீபத் திருவிழா
ShareTweetSendShare
Previous Post

ராமேஸ்வரத்தில் காதலிக்க மறுத்ததால் மாணவி கழுத்து அறுத்து கொலை!

Next Post

டிச.30, 31, ஜன.1 தேதிகளில் இலவச டோக்கன்கள் ஆன்லைனில் வெளியாகும் – திருமலை திருப்பதி தேவஸ்தானம்!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies