அனைத்து பன்முகத் தன்மைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டு மதிக்கப்படும் ஒரே நாடு இந்தியா என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
அசாம் மாநிலம் கவுகாத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று பேசிய அவர், இந்தியாவை உலகின் முன்னணி நாடாக உருவாக்குவதான் ஆர்எஸ்எஸ் நோக்கம் எனக் கூறினார்.
ஒரு நாடு சிறந்ததாக மாறுவதற்கு தலைவர்கள், கொள்கைகள், கட்சிகள் மற்றும் பெரிய மனிதர்கள் வெறும் உதவிக் காரணிகளே எனக் கூறிய மோகன் பாகவத், நாட்டின் முன்னேற்றம் மற்றும் எழுச்சிக்கு சமூகமே காரணம் என விளக்கம் அளித்தார்.
இந்தியாவில் பல மொழிகள், கடவுள்கள் இருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், அனைத்து பன்முகத் தன்மைகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டு மதிக்கப்படும் ஒரே நாடு இந்தியா என தெரிவித்தார்.
இதுதான் இந்தியாவின் அடையாளம் எனவும் உலகின் பிற பகுதிகளில் இத்தகைய சித்தாந்தங்கள் இல்லை எனவும் குறிப்பிட்டார். நமது அடையாளம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டு உள்ளதாகவும் நமது தேசம் பழமையானது மற்றும் நித்தியமானது எனவும் மோகன் பாகவத் கூறினார்.
















