ஆபத்தான கட்டிடத்தில் உங்கள் வீட்டுக் குழந்தைகளை கல்வி பயில அனுப்புவீர்களா? - ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
Mar 15, 2026, 05:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆபத்தான கட்டிடத்தில் உங்கள் வீட்டுக் குழந்தைகளை கல்வி பயில அனுப்புவீர்களா? – ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!

Murugesan M by Murugesan M
Nov 21, 2025, 07:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவ, மாணவியர் பாதுகாப்பு என்பது, திமுக அரசுக்கு அத்தனை இளக்காரமாகிவிட்டது என்று பாஜக  தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகிலுள்ள விளாங்காட்டூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளிக் கட்டிடங்கள், செயல்பாட்டுக்குத் தகுதியே இல்லாத, மிக மிக ஆபத்தான நிலையில், மேற்கூரைகள், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருக்கின்றன.

மழை பெய்யும்போதெல்லாம், மேற்கூரை ஒழுகும் நிலையில் இருக்கிறது. சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வரும் இந்தப் பள்ளிக்கு, புதிய கட்டிடங்கள் கட்டவோ, மாற்று இடம் அமைக்கவோ, பள்ளிக் கல்வித்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தவிர, சமையலுக்கு பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர்கள், பள்ளியின் வகுப்பறையில் வைக்கப்பட்டுள்ளன.

எத்தனை ஆபத்தான நிலையில் இந்த அரசுப் பள்ளி மாணவ, மாணவியரை வைத்திருக்கிறார்கள். ஆட்சிக்கு வந்தவுடன், பத்தாயிரம் அரசுப் பள்ளிகளுக்குப் புதிய கட்டிடங்கள் கட்டித் தருவோம் என்று கூறிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், முதலமைச்சர் ஸ்டாலினும், இதுவரை எந்தெந்த மாவட்டங்களில், எத்தனை பள்ளிகளுக்குக் கட்டிடங்கள் கட்டியிருக்கிறார்கள் என்று பல முறை கேள்வி எழுப்பியும், இதுவரை எந்தப் பதிலும் அளிக்காமல் இருக்கிறார்கள் என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

வாரம் ஒரு அரசுப் பள்ளியில், மேற்கூரை இடிந்து விழுவதும், சுவர் இடிந்து விழுவதுமாக இருக்கிறது. அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவ, மாணவியர் பாதுகாப்பு என்பது, திமுக அரசுக்கு அத்தனை இளக்காரமாகிவிட்டது என்று அண்ணாமலை குற்றம் சாட்டினார்.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சருக்கும், முதலமைச்சர்  ஸ்டாலினுக்கும், ஒரு கேள்வி, உங்கள் வீட்டுக் குழந்தைகளை, இப்படிப்பட்ட கட்டிடத்தில், கல்வி பயில அனுப்புவீர்களா? தெரிந்தே நமது குழந்தைகளை இத்தனை ஆபத்தில் வைத்திருக்க உங்கள் மனசாட்சி உறுத்தவில்லையா? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

Tags: MK StalinWould you send your children to study in a dangerous building? - Annamalai question to StalinbjpannamalaiDMK
ShareTweetSendShare
Previous Post

புதுக்கோட்டை : அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாவட்ட வருவாய் அலுவலரை முற்றுகையிட்டு நரிக்குறவர்கள்!

Next Post

சிறைக்கைதிகள் நலனுக்கு தொடங்கிய திட்டம் முடக்கம்? – அதிகாரிகள் மீது புகார்!

Related News

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies