அயோத்தி ராமர் கோயிலில் காவி கொடியை ஏற்றி வைத்தார் பிரதமர் மோடி!
May 6, 2026, 07:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

அயோத்தி ராமர் கோயிலில் காவி கொடியை ஏற்றி வைத்தார் பிரதமர் மோடி!

Murugesan M by Murugesan M
Nov 25, 2025, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தி ராமர் கோயிலின் 161 அடி உயர கோபுரத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள 30 அடி உயர கம்பத்தில் காவிக்கொடியை பிரதமர் மோடி ஏற்றி வைத்தார்.

ராமர் கோயில் கொடியேற்ற நிகழ்விற்காக அயோத்தி வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்று அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

பின்னர், ராமர் கோயில் செல்லும் பாதையில் பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தினார். அப்போது, சாலையின் இருபுறமும் திரண்ட ஏராளமானோர் கையில் தேசியக்கொடியை ஏந்தி பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர், ராமர் கோயிலில் பிரதமர் மோடி, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், ஆளுநர் ஆனந்திபென் ஆகியோர் வழிபாடு நடத்தினர். அவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, அயோத்தி ராமர் கோயிலின் 161 அடி உயர கோபுரத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள 30 அடி உயர கம்பத்தில் பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் ஆகியோர் காவிக்கொடியை ஏற்றி வைத்தனர்.

22 அடி நீளம் 11 அடி அகலத்தில் முக்கோண வடிவிலான காவிக்கொடியை இருவரும் ஏற்றிவைத்தபோது கோயில் வளாகத்தில் அமர்ந்திருந்த பக்தர்கள் ஜெய் ஸ்ரீராம் என கோஷம் எழுப்பினர்.

இதனை அடுத்து, அயோத்தி ராமர் கோயில் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர் மோடி மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் ஆகியோருக்கு காவிக்கொடியின் மாதிரியை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நினைவு பரிசாக வழங்கினார்.

Tags: PM ModiAyothi ramar templePrime Minister Modi hoisted the saffron flag at the Ayodhya Ram templeஅயோத்தி ராமர் கோயிலில் காவி கொடி
ShareTweetSendShare
Previous Post

காரல் மார்க்ஸை பின்பற்றுபவர்கள் நாகரீகத்தை சிதைக்கின்றனர் : ஆளுநர் ஆர்.என்.ரவி

Next Post

ராம ராஜ்ஜியத்தின் கொடி பறக்கிறது – மோகன் பாகவத்

Related News

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

புதுச்சேரியில் மீண்டும் NDA ஆட்சி; பெரும்பான்மை இடங்களில் வெற்றி

கேரளம் சட்டப்பேரவை தேர்தல் – ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ் கூட்டணி!

அசாமில் 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி!

மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைக்கிறது பாஜக – பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies