கனமழை காரணமாகத் தூத்துக்குடி மாவட்டம் காலங்கரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட வாழைத் தோட்டத்தில் மழைநீர் தேங்கி உள்ளது.
கோரம்பள்ளம் குளத்திற்கு செல்லக்கூடிய வடிகால் ஏற்கெனவே நிரம்பியுள்ளதால் தற்போதைய சூழலில் மழைநீர் வடியாத நிலை உள்ளதாகவும், இதனால் வாழை மரங்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
















