இந்து கோயிலுக்குள் நுழைய மறுத்த ராணுவ அதிகாரியின் நடத்தை மிக ஒழுங்கீனமானது என உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்திய ராணுவத்தின் குதிரைப் படையில் கடந்த 2017ம் ஆண்டு சாமுவேல் கமலேசன் என்பவர் லெப்டினென்ட் அதிகாரியாக இணைந்தார்.
கிறிஸ்தவரான சாமுவேல் கமலேசன், வாரந்தோறும் ராணுவம் சார்பில் கோவில் மற்றும் குருத்வாராவில் நடக்கும் வழிபாட்டு நிகழ்ச்சியைப் புறக்கணித்து வந்தார்.
ராணுவத்தில் மதரீதியான பிளவுகளுக்கு இடமில்லை என்பதால், சாமுவேல் கமலேசனின் விளக்கத்தை ஏற்க மறுத்த அதிகாரிகள் அவரை பணி நீக்கம் செய்தனர்.
இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சாமுவேல் கமலேசனின் பணி நீக்கம் சரியே என கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
















