ஈரோட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் புலம்பி தள்ளியுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், டெல்டாவை பாலைவனமாக்க துடித்த துரோகத்தின் தொடர்ச்சியாகவே நெல்மணிகள் நனைவதை கண்டும் காணாமல் ஸ்டாலின் இருந்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.
விவசாயிகள் மீது அக்கறை கொள்ளாமல் வஞ்சித்த துரோகிதான் முதலமைச்சர் ஸ்டாலின் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். அற்ப அரசியல் லாபத்தை தேடிக்கொள்வதற்கு உண்மையிலேயே முதலமைச்சர் ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
மக்களுக்கு எந்த நன்மையும் வந்து விடக்கூடாது என நீலிக்கண்ணீர் வடிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், யார் துரோகி என்பதை கூற வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார். மேலும் மக்களுக்கு தேவையானவற்றை, தான் தான் செய்ய வேண்டும் என்றால், நீங்கள் எதற்கு முதலமைச்சராக உள்ளீர்கள் என்றும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
















