ரஷ்யாவின் சோயுஸ் MS-28 ராக்கெட்டை ஏவிய பிறகு பைக்கோனூர் ஏவுதளம் பெரிய அளவில் சேதமடைந்துள்ளது.
கஜகஸ்தானில் உள்ள பைக்கோனூர் ஏவுதளத்தை 2050 ஆம் ஆண்டு வரை ரஷ்யா குத்தகைக்கு எடுத்துள்ளது.
இந்நிலையில் நவம்பர் 27ம் தேதி அங்கிருந்து சர்வதேச விண்வெளி மையத்திற்கு சோயுஸ் MS-28 ராக்கெட்டை ஏவியது ரஷ்யா. அந்த விண்கலத்தில் அமெரிக்காவின் விண்வெளி வீரர் கிறிஸ் வில்லியம்ஸ், ரஷ்யாவின் செர்ஜி மிகேவ், செர்ஜி குட் ஆகியோர் சென்றுள்ளனர்.
இந்நிலையில் ராக்கெட்டை ஏவிய பிறகு ஏவுதளம் கடுமையான சேதத்தைச் சந்தித்துள்ளது. சர்வதேச விண்வெளி மையத்திற்கு மனிதர்களை ஏற்றிச் செல்லும் பணிகளுக்காக ரஷ்யா தற்போது பயன்படுத்தும் ஒரே ஏவுதளம் பைக்கோனூர் மட்டுமே.
இதனைச் சீரமைக்க இரண்டு ஆண்டுகள் வரை ஆகலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள விண்வெளி நிபுணர் விட்டலி யெகோரோவ், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திறனை ரஷ்யா இழந்துவிட்டதாகத் தெரிவித்தார்.
















