எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகளுக்கு எதிராக திமுக சார்பில் ஆர்.எஸ். பாரதி தாக்கல் செய்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் நடைமுறைப்படுத்துவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க. சார்பில் அதன் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில், எஸ்ஐஆர் நடவடிக்கைகளுக்கு எதிராக திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
அதில், திமுகவின் ரிட் மனு முற்றிலும் ஊகத்தின் அடிப்படையிலானது மற்றும் விசாரணைக்கு தகுதியற்றது என்றும் ,S.I.R நடவடிக்கைகளை தடுக்க மறைமுக நோக்கங்களுடன் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















