ரஷ்யாவில் மசூதி கட்டுவதற்கு எதிராகக் கவிதை பாடிய சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
பெர்ம் நகரில் மசூதி கட்டும் திட்டத்திற்கு எதிராகக் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் மசூதிக்கு எதிராக 12 வயதான மரியா யுஷ்கோவா என்பவர் உணர்வுபூர்வமான ஒரு கவிதை வாசித்தார். எழுந்து வாருங்கள் என் மக்களே, கொடூரமான கூட்டம் நம் மீது தாக்குதல் நடத்துகிறது. தாய்நாட்டை அழிப்பதற்காக மசூதி நீண்டு நிற்கிறது.
அந்தப் பெரும் மசூதி நமக்காக ஒரு சாட்டையைத் தயார் செய்கிறது என அந்தக் கவிதை அமைந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத் தீப்போல் பரவியது.
இதையடுத்து போலீசார் சிறுமிக்குச் சம்மன் அனுப்பி பல மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் ரஷ்ய அரசியலமைப்பின் 51வது பிரிவை மேற்கோள் காட்டி, அதிகாரிகளின் எந்தக் கேள்விக்கும் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
தொடர்ந்து வெறுப்பை தூண்டும் வகையில் வீடியோ வெளியிட்டதாகச் சிறுமியின் பெற்றோர் மீது நடவடிக்கை எடுப்பதாகப் போலீசார் மிரட்டியுள்ளனர். பின்னர் விசாரணை முடிந்து சிறுமி மரியா விடுவிக்கப்பட்டார்.
















