மொழி அரசியலை ஒழிக்க வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழ்நாடு மற்றும் உத்தரப் பிரதேச மாநிலம் காசிக்கும் இடையிலான ஆழமான நாகரிக பிணைப்பை கொண்டாடும் வகையில் காசி தமிழ் சங்கமம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் 4.0 நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்ச்சியில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசியவர், மொழி அரசியலை ஒழிக்க வேண்டும் என்று கூறினார்.
உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஆயிரம் மாணவர்கள் தமிழகம் வந்து சிறு சிறு தமிழ் வார்த்தைகளை கற்க உள்ளனர் எனவும் தெரிவித்தார். உத்தரபிரதேச மக்கள் நம்மை சகோதரனாக பார்க்கின்றனர், இது குறித்த புரிதல் இங்கு சிலருக்கு இருக்க வேண்டும் என்றும் அண்ணாமலை அறிவுறுத்தினார்.
















