மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2-ஆவது கட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், வெல்லும் தமிழ்ப் பெண்கள் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் சத்யராஜ், சமூக சேவகி கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதன், திரைப்பட இயக்குநர் த.செ. ஞானவேல், இறகு பந்து போட்டி வீராங்கனை துளசிமதி முருகேசன் உட்பட பலர் கலந்துகொண்டர்.
தொடர்ந்து, பெண்கள் பலர் கலந்து கொண்டு பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நடத்தினர். அரசின் பல்வேறு திட்டங்களில் பயன்பெற்ற பெண்கள் பலரும், தங்கள் பயணத்தைப் பற்றி பேசினர்.
இதனையடுத்து, முதலமைச்சர் ஸ்டாலின், மகளிர் உரிமைத் திட்டத்தின் 2ம் கட்டத்தில் 16 லட்சத்து 94 ஆயிரம் பயனாளிகளை சேர்த்து, புதிய பயனாளிகளுக்கு கணக்கு அட்டையை வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், கல்விதான் சிறந்த முதலீடு என்றும் . தலைமுறைகள் முன்னேற பெண் கல்வி அவசியம் என்று கூறினார். வரலாற்றை திருத்தி எழுதும் திட்டம் மகளிர் உரிமைத் தொகை என்றும் எல்லாருக்கும் எல்லாம் என்பது தான் தனது லட்சியம் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
















