தமிழக சட்டசபை கூட்டத் தொடர் அடுத்த மாதம் ஜனவரி 6ம் தேதி கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் சட்டசபை கூட்டத்தை ஆளுநர் தொடங்கி வைத்து உரை நிகழ்த்துவது வழக்கம். அந்த வகையில் 2026-ம் ஆண்டுக்கான சட்டசபை கூட்டத் தொடர் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.
ஜனவரி 6ம் தேதி சட்டசபை கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த கூட்டத் தொடர் சுமார் 4 நாட்கள் வரை நடைபெறும் என தெரிகிறது. இதற்கான கோப்புகள் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டசபையை கூட்டுவதற்கு அனுமதி அளித்ததும் அதுதொடர்பான அறிவிப்பை சட்டசபை செயலகம் வெளியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
















