பாஜகவிற்கு எதிராக முதலமைச்சர் ஸ்டாலின் விஷத்தை கக்கி இருக்கிறார் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், என்றைக்காவது இந்து மதத்தினரின் விழாக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளீர்களா என முதலமைச்சருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
கிறிஸ்துமஸ் மேடையில் மத வேற்றுமையை விதைத்துவிட்டு, பாஜகவை குறை கூற முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை என கூறியுள்ள தமிழிசை செளந்தரராஜன், மதச்சார்பற்றவராக இருந்தால் பகவத் கீதை வாசகங்களை என்றாவது குறிப்பிட்டு இருக்கிறீர்களா? எனவும் விமர்சித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இந்துக்கள் மீது இவ்வளவு பகை ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள அவர், மதச்சார்பின்மையை பேச முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எந்தவித உரிமையும் இல்லை என்பதை வலிமையாக பதிவு செய்வதாகவும் கூறியுள்ளார்.
















