ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீர் திட்டங்கள் முழுமையாக செயல்படாததால் பல கிராமங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் மண்ணில், இன்று நம் “தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்” யாத்திரை சிறப்பாக நடைபெற்றது.
இதில் பங்கேற்று பேசிய நயினார் நாகேந்திரன், வரலாற்றுப் பெருமையும், பொருளாதார முக்கியத்துவமும் கொண்ட இந்த சேலம் ஆத்தூர் பகுதியில், விடியா திமுக அரசு மக்களின் அடிப்படை தேவைகளில் உரிய கவனம் செலுத்தாமல் அலட்சியமாக செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார்.
குடிநீர் திட்டங்கள் முழுமையாக செயல்படாததால் பல கிராமங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாக கூறினார்.
ஆத்தூர் நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாலை வசதிகள் மோசமான நிலை, வடிகால் அமைப்புகள் முறையாக இல்லாததால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி மக்கள் அவதியடையும் நிலைஅன்றாட வாழ்க்கையை கடுமையாக பாதித்து வருகிறது என்றும் அவர் கூறினார்.
வேலைவாய்ப்பின்மை, இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்புகள் இல்லாமை, அரசு மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இல்லாத நிலை இவை அனைத்தும் ஆத்தூர் மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளாகவே உள்ளன.
இதற்கான தக்க பதிலடியை 2026 சட்டமன்றத் தேர்தலில் சேலம் – ஆத்தூர் மக்கள் வழங்குவார்கள் என்பது உறுதி என நயினார் தெரிவித்துள்ளார்.,
















