தீபாவளிக்கு வாழ்த்து கூறாத முதலமைச்சருக்கு ‘மதச்சார்பின்மை’ பற்றி பேச தகுதியில்லை என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மேடைகளில் மதச்சார்பின்மை பற்றியும், மகாத்மா காந்தி குறித்தும் பேசி வரும் முதலமைச்சர் ஸ்டாலின், உண்மையில் மதச்சார்பின்மையைக் கடைபிடிக்கிறாரா? என கேள்வி எழுப்பினார்.
கிறிஸ்துமஸ் விழாக்களில் ஆர்வமுடன் கலந்து கொள்ளும் ஸ்டாலினுக்கு தீபாவளி வாழ்த்து கூற மனமில்லை என விமர்சித்த அவர், ‘மதச்சார்பின்மை’ பற்றி பேச முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தகுதி இல்லை என தெரிவித்தார். ஏழை எளிய மக்களின் நலன் கருதி நூறு நாள் வேலை திட்டத்தை 125 நாட்களாக பிரதமர் மோடி உயர்த்தி இருப்பதாகவும் அவர் கூறினார்.
















