திமுக ஆட்சியில் ஏழாயிரத்து 500 கொலைகள் நடந்துள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், கடநத் 4 மாதமாக டிஜிபியை நியமிக்க முடியாமல் தமிழக அரசு திணறி வருவதாக தெரிவித்தார்.
தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகவும் அவர் சாடினார்.
அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக தலா ரூ.40 கோடி வரை பணம் பதுக்கி வைத்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
தேர்தல் காலத்தில் சொன்னதை நிறைவேற்றாத திமுக ,மத்திய அரசை பகைத்து கொண்டது தான் மிச்சம் என்றும் அவர் கூறினார்.
200 தொகுதிகளில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்றும் நயினார் நாகேந்திரன் நம்பிக்கை தெரிவித்தார்.
















