திருப்பரங்குன்றம் முருகனை வழிபட்டு விட்டு “உங்களுடன் நான் இருக்கிறேன்” என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினால் மக்கள் ஏற்று கொள்வார்கள் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சரை காவடி எடுக்க சொல்லவில்லை, கோயிலில் சாமி தரிசனம் செய்யதான் சொல்கிறேன் என தெரிவித்தார்.
எப்போது தேர்தல் நடந்தாலும் திமுக வீட்டுக்கு செல்வது உறுதி என்றும், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தான் ஆட்சி அமைக்கும் என்றும் எல்.முருகன் கூறினார்.
















