திருச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் பாஜக மையக்குழு கூட்டம் நடைபெற்றது.
இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகை தந்துள்ளார். இந்நிலையில் திருச்சியில் அவர் தலைமையில் பாஜக மையக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல், அர்ஜூன் ராம் மேக்வால், எல்.முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதேபோல் பாஜக முக்கிய நிர்வாகிகளான அண்ணாமலை, ஹெச்.ராஜா, தமிழிசை சௌந்தரராஜன், அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
















