திமுக அரசு தேர்தலுக்காகவே 3 ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு அறிவித்துள்ளதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
துக்கோட்டையில் நடைபெற்ற தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் நிறைவு விழாவில் பேசிய அவர், சென்ற ஆண்டு பொங்கலுக்கு ஒரு ரூபாய் கூட திமுக அரசு வழங்கவில்லை என தெரிவித்தார்.
பொங்கலுக்கு 3000 கொடுத்தால் வாக்கு வந்து விடும் என நினைக்கின்றனர் என்றும், என தெரிவித்தார்.
2021ம் ஆண்டு ஒவ்வொரு ரேசன் கார்டுக்கும் 2.04 லட்சம் கடன் இருந்தது என்றும், ஆனால் திமுக அரசின் மோசமான நிர்வாகம் காரணமாக அது 4.54 லட்சமாக உயர்ந்துள்ளதாக தெரிவித்தார்.
ஆட்சிக்கு வந்த பின் ரூ. 5 லட்சம் கோடி திமுக அரசு கடன் வாங்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். “இந்தியாவின் சரித்திரத்திலேயே அதிக கடன் பெற்ற மாநிலம் தமிழ்நாடு மட்டும்தான் என்றும் அண்ணாமலை சாடினார்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதே மக்களின் ஒருமித்த குரலாக உள்ளது என்றும், “தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வரும் நிறுவனங்கள், கமிஷன் கொடுப்பதை தவிர்க்கவே பிற மாநிலங்களுக்கு செல்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
















