மதுரை திருமங்கலம் அருகே முதலமைச்சர் ஸ்டாலின் சென்ற காரின் டயர் வெடித்ததால் பதற்றம் நிலவியது.
திண்டுக்கலில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்டாலின், அங்கிருந்து காரில் மதுரை விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். தனக்கன்குளம் விலக்கு பகுதியில் பயணித்த போது எதிர்பாராத விதமாக காரின் டயர் வெடித்தது.
தொடர்ந்து சாதுர்யமாக செயல்பட்ட ஓட்டுநர் காரை உடனடியாக நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதையடுத்து காருக்கு வேறு டயர் மாற்றப்பட்டு முதலமைச்சர் ஸ்டாலின் அங்கிருந்து மதுரை விமான நிலையம் புறப்பட்டு சென்றார்.
















