வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ, அமெரிக்காவால் கைது செய்யப்பட்டதன் தாக்கம் காரணமாக உலக சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை சரிவடைந்துள்ளது.
அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக குற்றம்சாட்டி, கடந்த 3-ம் தேதி வெனிசுலாவில் தாக்குதல் நடத்தி அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோவை அமெரிக்க ராணுவம் கைது செய்தது. தற்போது அவர் புரூக்ளின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதன் தாக்கம் காரணமாக உலக சந்தைகளில் அமெரிக்காவின் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 56.96 டாலராக குறைந்தது. சர்வதேச தரத்திலான பிரென்ட் ரக கச்சா எண்ணெய் விலை, 34 சென்ட் குறைந்து 60.41 டாலராக இருந்தது.
வெனிசுலா கச்சா எண்ணெய் உற்பத்தியில் அமெரிக்கா தலையிடும் என்ற டிரம்ப் அறிவிப்பால், உற்பத்தி அதிகரிக்கப்படும் என கருதப்படுகிறது. இதன் காரணமாகவே கச்சா எண்ணெய்யின் சந்தை விலை சிறிது சரிவை கண்டுள்ளது. அதிபர் டிரம்ப்பின் அறிக்கைகளை அடுத்து, அமெரிக்க நிதி சந்தைகளில் தாக்கம் ஏற்பட்டுள்ளது. அங்கு தங்கத்தின் விலை 2.70 சதவீதமும் வெள்ளியின் விலை 6.60 சதவீதமும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
















