தருமபுரி அருகே உள்ள முருகன் கோயிலில் புதுப்பிக்கப்பட்ட கட்டடம் கோஷ்டி பூசலால் இடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி 33வது வார்டு அன்னசகரம் பகுதியில் உள்ள விநாயகர் சிவசுப்ரமணிய சுவாமி கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த கோயிலில், வரும் 16ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதால் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
கோயில் வளாகத்தில் முருகன் சன்னதி அருகே உள்ள இடும்பன் சன்னதி பழுதடைந்துள்ளதால், மண்டபத்துடன் கூடிய இடும்பன் சன்னதி கட்டப்பட்டு வருகிறது.
இடும்பன் சன்னதி பழமை மாறாமல் அப்படியே இருக்க வேண்டும் எனக்கூறி ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நள்ளிரவு எதிர் தரப்பினர் கோயில் கட்டுமான பணிகளை இடித்து அகற்றியுள்ளனர்.
இதனால், இரு தரப்பினர் இடையே மோதல் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், கோயில் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
















