பாஜக தேசிய செயல் தலைவராக பொறுப்பேற்ற பின் முதன் முறையாக தமிழகம் வரும் நிதின் நபின் , கோவையில் நடக்கும் ப்ரொபஷனல் கனெக்ட் நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளதாக பாஜக ப்ரொபஷனல் பிரிவு அமைப்பாளர் சுந்தர்ராமன் தெரிவித்துள்ளார்.
கோவையில் வரும் 10 ஆம் தேதி பாஜக ப்ரொபஷனல் பிரிவின் ப்ரொபஷனல் கனெக்ட் நிகழ்வு நடைபெறவுள்ளது.
இதில் பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கலந்து கொள்ள உள்ளதாக பாஜக ப்ரொபஷனல் பிரிவு மாநில நிர்வாகி சுந்தர்ராமன் தெரிவித்துள்ளார்.
ஒரு லட்சம் பேரை இணைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டு வருவதாகவும், தங்கள் பிரிவு சார்பில் தேர்தல் வியூகங்களை அமைக்கும் வகையில் துறை சார்ந்த சவால்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜிஎஸ்டி 2.0 குறித்த விழிப்புணர்வை மாணவர்கள், தொழில் துறையினர், மத்தியில் கொண்டு சேர்த்துள்ளதாகவும் அதே போல் பட்ஜெட் தொடர்பாக எதிர்பார்ப்புகளை தயாரித்து நிதியமைச்சருக்கு அனுப்பி உள்ளதாகவும் சுந்தர்ராமன் தெரிவித்தார்.
















